பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர், பெற்றோர் மற்றும் மாணவச் செல்வங்களே!
மாணவர்கள், தமிழ்மொழிப்பாடத்தை, அருமையான சமச்சீர் கல்விப்புத்தகங்களில், கல்வியிற் சிறந்த ஆசிரியர்களின் கற்பித்தலோடு இப்போது கற்று வருகிறார்கள்.
ஆனால், பல மாணவர்கள் ஒற்றுப்பிழை, சந்திப்பிழை, மரபுப்பிழை, தொடர்-அமைப்புப் பிழை, கருத்துப்பிழை, இலக்கணப் பிழை, பொருந்தாச் சொல்லாட்சி போன்ற பிழைகளோடு தேர்வு எழுதுவதால், குறைந்த மதிப்பெண்களே பெறுகிறார்கள்.
இதுபோன்ற பிழைகளைத் தவிர்க்க, மாணவர்கள், நிறைய பயிற்சிகளைச் செய்து பழகினால் மட்டுமே தமிழ்மொழியைப் பிழையறக் கற்கவும் பிழையின்றி எழுதவும் சரியாக உச்சரிக்கவும் இயலும்.
மாணவர்கள் சிறந்த முறையில் தமிழ்மொழியைக் கற்க, தமிழ்த்தேனீயின் பயிற்சிப் புத்தகங்கள் பேருதவியாக இருக்கும் வகையில் ஆயத்தம் செயப்பட்டுள்ளன.
வகுப்பு ஒன்று முதல் ஒன்பது வரை பயிலும் மாணவர்களுக்குப் பல்வேறு, பயிற்சித் தலைப்புகள், தமிழ்த்தேனீயின் ஆசிரியர் குழுவால் சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் முறையாகப் பயிற்சி செய்து, தேர்வுகளில் பங்குபெறும்போது முழுமதிப்பெண்கள் பெற்றுப் பயன் பெறலாம் என்பதில் ஐயமில்லை.
பள்ளி முதல்வர்களுக்குப் பணிவான வேண்டுகோள்:
உங்கள் பள்ளி மாணவர்களின் தமிழ் மொழித் திறனை வளர்க்க தமிழ்த்தேனீயினை பள்ளிகளில் அறிமுகம் செய்யுமாறு அன்புடன் பள்ளி முதல்வர்களை, தமிழ் ஆசிரியர்களை வேண்டுகிறோம்.
அவர், திருச்சி முத்தமிழ்க் காவலர் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களின் மூத்த, முதற் பெயரன் ஆவார். திரு.மனோகரன், கல்லூரி ஆசிரியராக, தன் வாழ்வைத் தொடங்கி, வங்கி உயர் மேலாளர், வங்கிப் பயிற்சிக் கல்லூரி முதல்வர், நூலாசிரியர், பள்ளி – கல்லூரி மாணவர் மற்றும் ஆசிரியர்கள், தொழில் நிறுவனங்களின் பயிற்றுனர், எனப் பன்முகப் பட்டறிவு பெற்றவர்.
திரு. மனோகரன் அவர்கள், ஸ்பெல்பீ இன்டர் நேஷனல் (SpellBee International) ) என்ற ஆங்கில மொழித்திறன் வளர்க்கும் முன்னாள் கூட்டு நிறுவனத்தைத் தோற்றுவித்த இரு பங்குதாரரில் ஒருவர்.
நவம்பர் 2010 முதல் இரண்டரையாண்டுகள் பார்ட்டினராகப் பணியாற்றிய பிறகு ஸ்பெல்லிங் பீ இண்டர்னேஷனல் பாட்னர்ஷிப்பிலிருந்து மே 2013 ஆம் ஆண்டிலிருந்து முழுவதாகவும் திரு.ஏ.மனோகரன் விலகிக் கொண்டார். திரு மனோகரன் அவர்களுக்கு, ஸ்பெல்பீ இன்டர்னேஷனல் பிரைவேட் லிமிடெட் கம்பெனி நிறுவனத்திற்கும், அதன் ஆங்கிலப் புத்தகப் பயிற்சிக்கும், உரிமையாளர், புத்தக ஆசிரியர், பங்குதாரர், பங்குகள் போன்ற எந்தவிதத் தொடர்போ உரிமையோ இல்லை.அதுபோல் திரு மனோகரன் அவர்களுடைய குளோபல் அகதமி ஆஃப் லேங்குவேஜஸ் & ஸ்கில்ஸ் (Global Academy of Languages and Skills) என்னும் அவருடைய நிறுவனம் நடத்திவரும், ஸ்பெல்லிங் கிராமர் பீ (Spelling Grammar Bee) என்ற ஆங்கிலம் மற்றும் தமிழ்த்தேனீ (Tamil Thenee) என்ற தமிழ்ப் பயிற்சிகளுக்கும், ஸ்பெல் பீ இன்டர்னேஷனல் பிரைவேட் லிமிடட் (SpellBee International Pvt.Ltd) என்ற நிறுவனம் நடத்திவரும் பயிற்சிகளுக்கும் எவ்விதத்திலும் தொடர்பில்லை. இரண்டு நிறுவனங்களும், அவை நடத்தி வரும் பயிற்சிகளும் வேறு-வேறானாவை;
NOTE
“Global Academy of Languages and Skills” is an independent educational institution. It is not affiliated, associated, connected, endorsed, sponsored, or authorised by, or in association with, any other organisation, company, institution, or educational programme operating in India or abroad.
The brand/product name "Spelling Grammar Bee" identifies the independent educational programme of Global Academy of Languages and Skills and is used solely in connection with its exclusive educational activities.
ANNOUNCEMENT
Global Academy of Languages and Skills has no business relationship, collaboration, affiliation, licensing arrangement, franchise, authorisation, or any other commercial or legal association with SpellBee International Pvt. Ltd. or with any of its educational programmes marketed under the names "SpellBee" or "SpellBee International." Or “SpellBee International”
30,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் / பேராசிரியர்களுக்கும், 75,000-க்கும் மேற்பட்ட உயர் பள்ளி மாணவர்களுக்கும் மொழி வளர் மற்றும் தன் முன்னேற்ற, ஊக்குவிப்புப் பயிற்சிகளைக் கட்டணம் ஏதுமின்றி, சேவை எண்ணத்தோடு பயிற்றுவித்தவர். மேலும், 100-க்கும் மேற்பட்ட பொறியியல், மேலாண்மைக் கல்லூரிகளில், 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் தொழில் முனைவோர் (Entrepreneurship), நிதி, வங்கி மேலாண்மைப் பயிற்சிகளை நடத்தியவர்.
பள்ளி மாணவர்களின் தமிழ்மொழி வளர்ச்சிக்காக, எங்கள் நிறுவனத்தின் தமிழ் அறிஞர்கள், பள்ளி ஆசிரியர், தமிழ்ப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு எழுதப்பட்ட இலக்கிய, இலக்கணங்களை உள்ளடக்கிய பயிற்சிப் புத்தகங்களின் தொகுதியே ‘தமிழ்த்தேனீ’ ஆகும்.
பள்ளி மாணவர்கள் தமிழைப் பிழையறக் கற்கவும், எழுதவும், பேசவும், புதுச் சொற்களை அறியவும், பயிற்சி நூல் ஒன்று இருப்பின், பள்ளித் தமிழாசிரியர்களின்பெரும் உழைப்பிற்குச் சிறு துணையாகத் தோள் கொடுக்கும் என்ற எண்ணத்தில் முகிழ்த்ததே இத்தமிழ்த்தேனீ
வகுப்பு ஒன்று முதல் ஒன்பது வரை, ஒன்பது புத்தகங்கள் வெளிவந்துள்ளன. தமிழாசிரியர்கள், பேராசிரியர்களின் வழிகாட்டுதற் குழுவின் சீரிய முயற்சியில் தமிழ்த்தேனீயின் பயிற்சி மேற்கொள்வதால், பின்னாளில் தமிழ்ப் பொதுத் தேர்வில் உயர் மதிப்பெண்பெறல் எளிதாகும்; போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வுகள், அரசுப் பணித் தேர்வுகள் எழுதத் துணை புரியும்
ஆசிரியர் பெருமக்களும், பெற்றோர்களும், தமிழறிஞர்களும் தங்கள் மேலான கருத்துகளை, (காப்புரிமை பெற்ற) தமிழ்த்தேனீயின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கத் தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
பள்ளி முதல்வர் தாளாளர் மற்றும் தமிழ் ஆசிரியர்கள் பள்ளியில்
தமிழ்த்தேனீயின் விளக்கம்பெற, எங்களைத் தொடர்பு கொள்ளவும்
➦ அன்புள்ள பள்ளித் தாளாளர், மற்றும் பள்ளி முதல்வர் / தலைமை ஆசிரியர் அவர்களுக்கு, தமிழ்த்தேனீயின் அன்பு வணக்கங்கள்! நல்வாழ்த்துகள்!
➦ தமிழ்த்தேனீ என்பது பள்ளி மாணவர்களின் தமிழ்மொழித் திறனை வளர்ப்பதற்காக, சிறப்பாக உருவாக்கப்பட்ட இரு பயிற்சி நூல்களாகும். வகுப்பு ஒன்று முதல் ஒன்பது வரை கல்வி பயிலும் மாணவர்களுக்காக, தமிழ் சான்றோர்களின் சீரிய முயற்சியில், தனிச்சிறப்பு பெற்ற இந்நூற்தொகுதி, வகுப்பு-வயதுக்கு ஏற்ப பயிற்சி நூல்களை, “தமிழ்த்தேனீ” என்ற பெயரில் ஒன்பது பயிற்சிப் புத்தகங்களாக, “பன்னாட்டு மொழி & திறன் வளர் கழகம்” என்ற நிறுவனம் (GLOBAL ACADEMY OF LANGUAGES AND SKILLS) பதிப்பிட்டு, தமிழகத்தில் பல நூறு பள்ளிகளில் அறிமுகப்படுத்தி வருகின்றது.
➦ தங்கள் பள்ளி மாணவர்களுக்கும் இப்பயிற்சிப் புத்தகங்களை அருள்கூர்ந்து அறிமுகப்படுத்த வேண்டுகிறோம். தமிழ்த்தேனீ வழங்கும் புத்தகப் பயிற்சிகளை, மாணவர்கள், தங்கள் வீட்டிலேயே, பெரியோர் துணையுடன் படித்து, பயிற்சிகளைச் செய்து பழகலாம்.
➦ அனைத்துக் கேள்விகளுக்கும் விடை அறிந்து கொள்ளும் வகையில், புத்தக இறுதியிலேயே விடைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மாணவர்கள், தன்னிலையாக / தன்முனைப்புடன், மிக எளிதாகப் படித்து, பயிற்சிகளின் வழியாகத் தங்கள் மொழித்திறனை வளர்த்துக் கொள்ள தமிழ்த்தேனீ துணை புரியும்.
முதல் மூன்று வகுப்பு படிக்கும் சிறு மாணவர்களுக்கு, அவர்தம் பெற்றோர்/தாத்தா/பாட்டி மற்றும் மூத்தோரின் வழிகாட்டுதல் கற்றலை மேம்படுத்தும்
➦ அனைத்துப் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை எளிதாகச் சேர்த்து பயன்பெறும் வகையில், மிகக் குறைந்த பயிற்சிக் கட்டணத்தில் தமிழ்த்தேனீ பயிற்சியினை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
➦ இப்பயிற்சி, அறிமுகப் பயிற்சி மற்றும் மாநிலச் சிறப்புப் பயிற்சி என்று இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது.
➦ பள்ளியானது, மாணவர்களை, தமிழ்த்தேனீ பயிற்சியில் சேர்ந்து பயன்பெற ஊக்குவிக்கும்.
➦ ஆனால், மாணவர்களை எந்த வகையிலும் பள்ளியோ, தமிழ்த்தேனீயோ கட்டாயப்படுத்தாது.
➦ தமிழ்த்தேனீயின் நிறுவனம், எக்காலத்திலும் பெற்றோரை அல்லது மாணவரை நேரடியாகத் தொடர்பு கொள்ளாது.
➦ மொழிப் பயிற்சிப் புத்தகத்தேர்வு நடத்தி, சான்றிதழ் / பதக்கங்கள் வழங்கும் பன்னாட்டு மொழி & திறன் வளர் கழகம் (Global Academy of Languages and Skills) தமிழறிஞர் ஒருவருக்கு உரிமையுள்ள ஒரு தனியார் மொழி ஆய்வு நிறுவனம் ஆகும்; பள்ளி மேலாண்மைக்கோ மாநில-மைய அரசுக்கோ எவ்வகையிலும் தொடர்பில்லை.
வகுப்பு 1 முதல் 9 வரை படிக்கும் மாணவர்கள், தமிழ்த்தேனீயில் சேர்ந்து பயிற்சிப் பெற,
மொழித்திறன் வளர்க்க, பதிவு செய்து விண்ணப்பிக்க இறுதி நாள் அக்டோபர் 15, 2025.
+91 99942 09268, +91 98849 18846, +91 99942 01925, 044 – 48673510
tamilthenee@gmail.com, contact@tamilthenee.com, www.tamilthenee.com
➦ தமிழ்மொழிப் பாடத்தில் கூடுதலான அக்கறை செலுத்துதல்.
➦ தமிழ்மொழித் தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண்கள் பெறுதல்.
➦ பிழையின்றி உச்சரிக்க மாணவர் அக்கறை கொள்ளல்.
➦ ஒற்றுப்பிழை, சந்திப்பிழை குறித்த விழிப்புணர்வு கொள்ளுதல்.
➦ ர,ற, ல,ள,ழ, ந,ன,ண எழுத்துகளின் வேறுபாட்டு ஐயம் குறைதல்.
➦ சொற்களுக்குச் சரியான பொருள் அறிதல்.
➦ பயனுள்ள, புதுச் சொற்களை அறிதல் / பயன்படுத்துதல்.
➦ இலக்கணப் பிழைகள் குறைதல்.
➦ அடிப்படை இலக்கணம் அறிவதோடு, ஐயமும் அகலுதல்.
➦ பேச்சுமொழிச் சொற்களுக்கு இணையான எழுத்துமொழி அறிதல்.
➦ பள்ளி நேரத்திற்கு வெளியேயும் தமிழ் மொழி கற்றல்.
➦ பள்ளிப் பாடத்திற்கு உறுதுணையாய்ப் பயிற்சிகள் விளங்குதல்.
➦ மாணவரிடையே தொலைக்காட்சி, கைபேசி, ஒலி-ஒளி விளையாட்டுகள்,பயனற்ற அரட்டைகள் மறைதல்.
➦ பள்ளியின் தமிழ்மொழித் தரம் வளரத் துணை புரிதல்.
➦ தமிழ்த்தேனீயில் பயிற்சி பெற்ற மாணவர்கள், பின்னாளில், போட்டி தேர்வுகளில், (TNPSC, UPSC, TNUSRB, IAS, IPS, IFS and others) தமிழ் ஒரு பாடமாக இருப்பதால், எளிதாக தேர்வெழுதி உயர் மதிப்பெண் பெற இயலும்.
➦ தமிழில் மொழித் திறனை வளர்த்துக் கொண்ட மாணவர்கள், பின்னாளில் தமிழ் ஆசிரியர், பேராசிரியர், மொழிப்பெயர்ப்பாளர், செய்தி வாசிப்பாளர், தொலைக்காட்சி / திரைத்துறையில் பாடலாசிரியர், வசனகர்த்தா, பின்னணிக் குரல் கொடுப்போர், தொகுப்பாளர், அரசியல் பேச்சாளர், தமிழக அரசு பணிகள் மற்றும் ஊடகங்கள் போன்ற துறைப் பணிகளில் சேர்வது எளிதாகும்.