அவர், திருச்சி முத்தமிழ்க் காவலர் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களின் மூத்த, முதற் பெயரன் ஆவார். திரு.மனோகரன், கல்லூரி ஆசிரியராக, தன் வாழ்வைத் தொடங்கி, வங்கி உயர் மேலாளர், வங்கிப் பயிற்சிக் கல்லூரி முதல்வர், நூலாசிரியர், பள்ளி – கல்லூரி மாணவர் மற்றும் ஆசிரியர்கள், தொழில் நிறுவனங்களின் பயிற்றுனர், எனப் பன்முகப் பட்டறிவு பெற்றவர்.
திரு. மனோகரன் அவர்கள், ஸ்பெல்பீ இன்டர் நேஷனல் (SpellBee International) ) என்ற ஆங்கில மொழித்திறன் வளர்க்கும் முன்னாள் கூட்டு நிறுவனத்தைத் தோற்றுவித்த இரு பங்குதாரரில் ஒருவர்.
நவம்பர் 2010 முதல் இரண்டரையாண்டுகள் பார்ட்டினராகப் பணியாற்றிய பிறகு ஸ்பெல்லிங் பீ இண்டர்னேஷனல் பாட்னர்ஷிப்பிலிருந்து மே 2013 ஆம் ஆண்டிலிருந்து முழுவதாகவும் திரு.ஏ.மனோகரன் விலகிக் கொண்டார். திரு மனோகரன் அவர்களுக்கு, ஸ்பெல்பீ இன்டர்னேஷனல் பிரைவேட் லிமிடெட் கம்பெனி நிறுவனத்திற்கும், அதன் ஆங்கிலப் புத்தகப் பயிற்சிக்கும், உரிமையாளர், புத்தக ஆசிரியர், பங்குதாரர், பங்குகள் போன்ற எந்தவிதத் தொடர்போ உரிமையோ இல்லை.அதுபோல் திரு மனோகரன் அவர்களுடைய குளோபல் அகதமி ஆஃப் லேங்குவேஜஸ் & ஸ்கில்ஸ் (Global Academy of Languages and Skills) என்னும் அவருடைய நிறுவனம் நடத்திவரும், ஸ்பெல்லிங் கிராமர் பீ (Spelling Grammar Bee) என்ற ஆங்கிலம் மற்றும் தமிழ்த்தேனீ (Tamil Thenee) என்ற தமிழ்ப் பயிற்சிகளுக்கும், ஸ்பெல் பீ இன்டர்னேஷனல் பிரைவேட் லிமிடட் (SpellBee International Pvt.Ltd) என்ற நிறுவனம் நடத்திவரும் பயிற்சிகளுக்கும் எவ்விதத்திலும் தொடர்பில்லை. இரண்டு நிறுவனங்களும், அவை நடத்தி வரும் பயிற்சிகளும் வேறு-வேறானாவை;
NOTE
“Global Academy of Languages and Skills” is an independent educational institution. It is not affiliated, associated, connected, endorsed, sponsored, or authorised by, or in association with, any other organisation, company, institution, or educational programme operating in India or abroad.
The brand/product name "Spelling Grammar Bee" identifies the independent educational programme of Global Academy of Languages and Skills and is used solely in connection with its exclusive educational activities.
ANNOUNCEMENT
Global Academy of Languages and Skills has no business relationship, collaboration, affiliation, licensing arrangement, franchise, authorisation, or any other commercial or legal association with SpellBee International Pvt. Ltd. or with any of its educational programmes marketed under the names "SpellBee" or "SpellBee International." Or “SpellBee International”
30,000-கும் மேற்பட்ட ஆசிரியர் / பேராசிரியர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் மொழி வளர்ச்சி மற்றும் தன்-முன்னேற்ற, ஊக்குவிப்புப் பயிற்சிகளைக் கட்டணம் ஏதுமின்றிப் பயிற்றுவித்தவர். மேலும், 100-க்கும் மேற்பட்ட பொறியியல், மேலாண்மைக் கல்லூரிகளில், 20,000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்குத் தொழில் முனைவோர் (Entrepreneurship), நிதி, வங்கி மேலாண்மை, மனிதவள மேலாண்மைப் பயிற்சிகளை நடத்தியவர்.
பள்ளி மாணவர்களின் தமிழ் மொழி வளர்ச்சிக்காக, எங்கள் நிறுவனத்தின் தமிழ் அறிஞர்கள், பள்ளி ஆசிரியர்கள், தமிழ்ப் பேராசிரியர்களின் வழிகாட்டுதல்களோடு எழுதப்பட்ட இலக்கிய-இலக்கணங்களை உள்ளடக்கிய பயிற்சிப் புத்தகங்களின் தொகுதியே ‘தமிழ்த்தேனீ ’ ஆகும்.
பள்ளி மாணவர்கள் தமிழைப் பிழையறக் கற்கவும், எழுதவும், பேசவும், புதுச் சொற்களை அறியவும், பயிற்சி நூல் ஒன்று இருப்பின், பள்ளித் தமிழாசிரியர்களின் பெரும் உழைப்பிற்குச் சிறு துணையாகத் தோள் கொடுக்கும் என்ற எண்ணத்தில் முகிழ்த்ததே இத்தமிழ்த்தேனீ.
வகுப்பு ஒன்று முதல் ஒன்பது வரை, ஒன்பது புத்தகங்கள் வெளிவந்துள்ளன. தமிழாசிரியர்கள், பேராசிரியர்களின் வழிகாட்டுதற் குழுவின் சீரிய முயற்சியால் உருவானத் தமிழ்த்தேனீ மொழிப்பயிற்சியினை மேற்கொள்வதால், பின்னாளில் தமிழ்ப் பொதுத்தேர்வில் உயர் மதிப்பெண் பெறுதல் எளிதாகும்; போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், அரசுப் பணித்தேர்வுகள் எழுதத் துணை நிற்கும்.
மாணவர்கள் பிழையறப் பேசவும், எழுதவும் ஊக்குவிப்பது எமது நோக்கம் ஆகும். ஆசிரியப்பெருமக்களும், பெற்றோர்களும், தமிழறிஞர்களும் தங்கள் மேலான கருத்துகளை, தமிழ்த்தேனீயின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு, தாழ்மையுடன் வேண்டுகிறோம்.